Sri Chakra Sri Vithya Peetam Ashram Mahasamasthanam, was established in Malaysia as a registered society by His Holiness Jagadguru Shankaracharya Sri Shankara Satchithanandhendra Saraswathy MahaSwamiji (169 pontiff "Pïțhādhipati") on 03rd Mar 2004. This non-profit spiritual and yogic educational society, is formed with a distinctive intention to educate, guide and align followers to practice Sanatana Dharma based on the Advaita Vedanta philosophy by the great guru Adi Shankara.
Saturday, 15 November 2014
Wednesday, 12 November 2014
பொருத்தம் பார்ப்பதில் நட்சத்திரமும், ஜாதகமும்
ஜோதிட ரத்னா முனைவர்க.ப.வித்யாதரன்:
நட்சத்திரம் என்பது என்ன? ஒருமனிதனை அறிமுகம் செய்வது நட்சத்திரம்.இந்த உலகத்திற்கு நான் இந்தநட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன்
என்று உரைப்பது ஒருவருடைய நட்சத்திரம். கோவில்களில் அர்ச்சனை
செய்யும் போது கூட, உங்களுடைய சாதி என்ன என்று கேட்கப்படுவதில்லை, என்ன நட்சத்திரம் என்றுதான் கேட்கப்படுகிறது.ஏனெனில் அதுவே ஒருவருடைய விலாசம், அதாவது நான் இந்த நட்சத்திரமண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்று கூறுகிறோம். அதனால்தான் பெயரைச்சொல்லி, நட்சத்திரத்தை சொல்கிறோம்.
எனவே திருமணத்திற்கு முதலில் நட்சத்திரப் பொருத்தம் பார்க்கிறோம்.
நட்சத்திரத்தை முடித்த பின்னர், மீதமுள்ள ஒன்பது இடங்களையும் பார்க்க
வேண்டும், அதற்கு ஜாதகத்தை புரட்டுகிறோம். நட்சத்திரப் பொருத்தம் என்பது
ஒரு தொடக்கம்.
இதையெல்லாவற்றையும் தாண்டி இப்போது நான் பார்ப்பது குறிப்பாக ஐந்து பொருத்தங்களைத்தான். தினப் பொருத்தம், கனப் பொருத்தம், யோனி பொருத்தம்,ராசிப் பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ஆகியன. இந்த ஐந்தும்தான் அடிப்படையானது. இதன் அடிப்படையில்தான் மற்ற பொருத்தங்கள் எல்லாம் பார்க்கப்படுகிறது. எனவே நட்சத்திரப் பொருத்தத்தைப் பார்த்துவிட்டு ஜாதகப்பொருத்தத்தைப் பார்க்காமல் இருந்துவிடலாகாது.
தினப் பொருத்தம் என்பது என்ன? தினந்தோறும் இவர்களிடையே நடைபெறும் சம்பாஷனைகள், அதாவது உரையாடல்கள். கணவன் ஒரு கேள்விகேட்டால், அதற்கு மனைவி சொல்லும் பதிலும், மனைவி ஒரு கேள்விகேட்டால் அதற்கு கணவன் சொல்லும் பதிலும் முக்கியமானது. அப்படிக்கேட்கும்போது பாந்தமாக ஒருவருக்கு ஒருவர் பதில் கூற வேண்டும்.
இன்னும் கூறப்போனால், நட்சத்திரப் பொருத்தம் என்பது அவர்கள் இருவரைமட்டும் சார்ந்தது, ஆனால், ஜாதகப் பொருத்தம் என்பது அவர்களுடைய உறவுகள்நிலை பற்றி உரைக்கக் கூடியது. மாமனார், மாமியார், நாத்தனார் போன்றவர்களோடு அனுசரித்துப் போவார்களா என்பதைக் கண்டறிய ஜாதகப்பொருத்தம் பார்ப்பது அவசியம். எனவே இந்த இரண்டிற்குமே நாம் முக்கியத்துவம்கொடுத்துப் பார்க்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)