Tuesday, 23 December 2014

ராமாயணத்தில் அனுமன் தோன்றிய கதை

ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். 

ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். 

ராமருக்கு அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை ஆஞ்சநேயர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும், சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.

source:Dinakaran

Monday, 22 December 2014

மூன்றாம் பிறை நிலவு

ஜோ‌தி ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: 

வளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச் சிறப்பு வாய்ந்தது. அது தெய்வீகமான பிறை என்றும் சொல்லலாம். இத்தாய் பிறை சூடிய பெருமானே என்று நாயன்மார்கள் பாடுகிறார்கள். இந்த மூன்றாம் பிறையைத்தான் சிவன் தன் முடி மீது அணிந்திருக்கிறார். காமாட்சி அம்மனைப் பார்த்தாலும் அந்த மூன்றாம் பிறைதான். 

இந்த மூன்றாம் பிறைக்கு என்ன விசேஷம் என்றால், அமாவாசை முடிந்து வெளிப்படக்கூடிய பிறைதான் மூன்றாம் பிறை. ஏனென்றால், அமாவாசை அன்றும், அதற்கு மறுநாளும் சந்திரன் தெரியாது. அதற்கு மறுநாள்தான் சந்திரன் மிளிரும். ஒரு கோடு போல ஒளிக்கீற்றாக வரும். அதனை ஏதாவது ஒரு காட்டில் இருந்தோ, ஒரு கிராமத்தில் இருந்தோ, மின் விளக்கு‌க‌ள் இல்லாத இடத்தில் இருந்து அடிவானத்தில் தோன்றும் போது அதன் பிரகாசத்தைப் பார்த்தால், அது உங்களுக்குள் ஏதோ ஒன்றைத் தூண்டும். முழு நிலவு எனு‌ம் பெளர்ணமி நிலவு தூண்டாத சில விஷயங்களை இந்த மூன்றாம் பிறை நிலவு நமக்குத் தூண்டும். வளர்ந்த பிள்ளைகளை விட வளரும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் போது நமக்கு ஒரு உற்சாகம் வருகிறதல்லவா, அந்தத் தூண்டுதலும், உற்சாகமும் மூன்றாம் பிறையில் தெரியும். 

அனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடுதான் தெய்வீகமான வழிபாடாக இருக்கிறது. இஸ்லாம் மத‌த்‌தி‌லிரு‌ந்து, கிறித்தவம், ஜைன‌ம், இந்து மத‌ம் என எல்லா மதத்திலும் மூன்றாம் பிறை என்பது தெய்வீக அம்சமாக உள்ளது. அந்தப் பிறையை கண்டு வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை. அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது.

Total Pageviews