ஜோதிட ரத்னா முனைவர்.ப.வித்யாதரன்:
குலம் காக்கும் தெய்வம் குலதெய்வம். இது வழிவழியாக வருவது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாரம்பரியமாகவழிபட்டுவரும் தெய்வம். ஆதிகாலத்தில் மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தான்.அப்போது பஞ்ச பூதங்களின் கூட்டாக குல தெய்வங்களை உருவாக்கி வழிபட்டுவந்திருக்கிறார்கள். இதேபோல்தான் காவல் தெய்வமும்.
இதில குல தெய்வதிற்குரிய முக்கியத்துவம் என்னவெனில், எந்த நல்ல காரியம்செய்வதென்றாலும், எடுத்துக்காட்டாக திருமணம் என்று சொன்னால்முதல் திருமணபத்திரிகையை குல தெய்வத்திற்கு வைத்து வணங்கி
விட்டுத்தான் மற்றதெய்வங்களுக்கு வைத்து வணங்கி, பிறகு கொடுக்கத் தொடங்குவார்கள்.இதேபோல் காவல் தெய்வமும் மிக முக்கியமானது.
காவல் தெய்வத்தைஎல்லைக் கடவுள் என்றும் சொல்கிறோம். எந்த ஒரு
நல்ல காரியத்தைமுன்னெடுக்கும்போதும், காவல் தெய்வத்தை வணங்கி
விட்டு அல்லது அதுஇருக்கும் திசையை நோக்கியாவது ஒரு கற்பூரத்தை ஏற்றி வணங்கிவிட்டுச்செல்வர்.
No comments:
Post a Comment